- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!
Vaibhav Suryavanshi Net Worth: ஐபிஎல் 2026 தொடரில் உலகின் மிகச்சிறந்த பவுலர்களையும் அடித்து துவம்சம் செய்யும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் சொத்து மதிப்பு குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் கோடீஸ்வரன்
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் போன்ற பெரிய பவுலர்களின் பந்துகளையும் பாரபட்சமின்றி சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கி வருகிறார்.
வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு
உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதிலேயே, வைபவ் ஒரு குறிப்பிடத்தக்க சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் ஊதியம், விளம்பர ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.1.10 கோடி ஊதியத்தில் தக்க வைத்துக் கொண்டது. மொத்த ஐபிஎல் வருமானம் இதுவரை சுமார் ரூ.2.2 கோடி ஆகும்.
ரூ.3 கோடியில் சொகுசு பிளாட்
பல கிரிக்கெட் வீரர்கள் சொகுசு வீடுகளில் வசிக்கும் நிலையில், வைபவ் இன்றும் பழமையை மறக்கவில்லை. இவர் பீகாரில் உள்ள தனது எளிமையான வீட்டில்தான் வசித்து வருகிறார். இவரது பூர்விக வீட்டின் மதிப்பு சுமார் ₹20 லட்சம் முதல் ₹60 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே வேளையில் தனது கிரிக்கெட் பயிற்சிக்காக மும்பையில் சுமார் ₹2.5 கோடி - ₹3 கோடி மதிப்பிலான சொகுசு பிளாட் ஒன்றை வைபவ் வாங்கியுள்ளார்.
சொகுசு கார்கள்
வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயதே ஆவதால் டிரைவிங் லைசன்ஸ் பெற முடியாது. ஆனாலும் அவரிடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் டாட்டா கர்வ் ஈவி (Tata Curvv EV) போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். இந்த கார்கள் அவருக்கு பரிசாக வந்தவை என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2026 தொடரில் ருத்ரதாண்டவம்
நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வைபவ் சூர்யவன்ஷி 4 போட்டிகளில் 266.66 ஸ்டிரைக் ரேட்டுடன், 50 சராசரியுடன் 200 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நேற்று ஆர்சிபிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய இவர் வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 78 ரன்கள் விளாசினார். மும்பைக்கு எதிரான போட்டியில் 14 பந்தில் 39 ரன்கள் அடித்தார். சிஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் நொறுக்கினார்.
சொத்து மதிப்பு இன்னும் உயரும்
ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடுவதாலும், ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், வரும் ஆண்டுகளில் வைபவின் சொத்து மதிப்பு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மை அவர் தொடர்ந்தால், விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் விரைவில் அவரது வருமானத்தின் முக்கிய பகுதியாக மாறும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவின் எதிர்கால ஸ்டார்
பீகாரின் ஒரு சிறிய நகரத்திலிருந்து பிரம்மாண்டமான ஐபிஎல் மேடைக்கு வந்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. திறமை, ஒழுக்கம் மற்றும் ஆரம்பத்திலேயே கிடைத்த வெற்றி என அனைத்தும் இவருக்கு சாதகமாக இருப்பதால், இந்தியாவின் அடுத்த பெரிய கிரிக்கெட் ஸ்டாராக இவர் உருவெடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

