MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?

yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?

yuzvendra chahal vape controversy: ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சாஹல், விமானப் பயணத்தின்போது இ-சிகரெட் (Vape) பயன்படுத்தியது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : May 07 2026, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இ சிகரெட் பிடித்த யுஸ்வேந்திர சாஹல்
Image Credit : X/@mufaddal_vohra

இ-சிகரெட் பிடித்த யுஸ்வேந்திர சாஹல்

ஐபிஎல் போட்டிகளில் தனது சுழற்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் யுஸ்வேந்திர சாஹல், இப்போது மைதானத்திற்கு வெளியே ஒரு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் விமானத்திற்குள் அமர்ந்துகொண்டு இ-சிகரெட் (Vape) பிடிப்பது போன்ற ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. கேமராவைப் பார்த்ததும் அதை மறைக்க முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கிரிக்கெட் உலகில் இது ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்ட வீடியோ

தகவல்களின்படி, இந்த வீடியோவை வேறு யாரும் வெளியிடவில்லை, சாஹல் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஹைதராபாத் பயணத்தின்போது வீரர்கள் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டபோது, தவறுதலாக இந்த காட்சியும் அதில் இடம்பெற்றுவிட்டது. ரசிகர்கள் இதைக் கவனித்து கேள்வி எழுப்பத் தொடங்கியதும், அணி நிர்வாகம் உடனடியாக அந்த வீடியோவை நீக்கியது. ஆனால், அதற்குள் அந்த குறிப்பிட்ட கிளிப் மட்டும் இணையம் முழுவதும் வைரலாகிவிட்டது.

23
சாஹலுக்கு தடை விதிக்கப்படுமா?
Image Credit : X (Twitter)

சாஹலுக்கு தடை விதிக்கப்படுமா?

விமானத்தில் சிகரெட் அல்லது இ-சிகரெட் பிடிப்பது ஒரு சாதாரண விஷயமல்ல. இது சட்டப்படி குற்றம். இதனால் விமானத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். இந்த விவகாரம் தீவிரமானால், சாஹலின் பெயர் 'நோ ஃப்ளை லிஸ்ட்' (No Fly List) எனப்படும் தடைப் பட்டியலில் சேர்க்கப்படலாம். அப்படி நடந்தால், அவர் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்படலாம்.

ரியான் பராக் விஷயத்தில் என்ன நடந்தது?

சமீபத்தில்கூட, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் செய்தபோது பிடிபட்டார். அதற்காக பிசிசிஐ, அவரது போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதித்தது. இப்போது ரசிகர்கள், "டிரெஸ்ஸிங் ரூமில் செய்ததற்கே அபராதம் என்றால், உயர் பாதுகாப்புள்ள விமானத்தில் செய்த சாஹலுக்கு இதைவிட பெரிய தண்டனை கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Look at Yuzvendra Chahal, man. He was risking everyone’s safety by vaping an e-cigarette inside the flight while Shashank Singh and other Punjab Kings⁠ players were around him. 👀

This is totally unacceptable and highly risky for everyone. Such behavior violates flight safety… pic.twitter.com/YnXlPmPhjr

— Sonu (@Cricket_live247) May 7, 2026

Related Articles

Related image1
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!
Related image2
டிரஸ்ஸிங் ரூமில் செய்யும் வேலையா இது! ஐபிஎல் மானத்தை வாங்கிய ரியான் பராக்.. பிசிசிஐ வைத்த செக்!
33
சாஹலின் வாக்குறுதி என்ன ஆனது?
Image Credit : ANI

சாஹலின் வாக்குறுதி என்ன ஆனது?

IPL 2026 தொடங்குவதற்கு முன்பு, சாஹல் ஒரு பேட்டியில், "கடந்த 6 மாதங்களாக நான் மதுவைத் தொடவே இல்லை. இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்" என்று பெருமையாகக் கூறியிருந்தார். ஆனால், இப்போது இந்த வீடியோ வெளியான பிறகு, அவரது வாக்குறுதி குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தியாவில் 2019-ஆம் ஆண்டிலிருந்தே இ-சிகரெட்டுகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, ஒரு முக்கிய வீரர் இப்படி நடந்துகொள்வது சட்டத்திற்கும் விளையாட்டு வீரரின் நன்னடத்தைக்கும் எதிரானது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
பஞ்சாப் கிங்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்
Recommended image2
DC vs CSK: சஞ்சு சாம்சன் மீண்டும் களத்தில்; சென்னை, டெல்லிக்கு இன்று வாழ்வா சாவா ஆட்டம்..!
Recommended image3
CSK vs DC: வாழ்வா-சாவா போராட்டம்..! பிளே-ஆஃப் கனவைத் தக்கவைக்கப் போவது எந்த அணி..?
Related Stories
Recommended image1
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!
Recommended image2
டிரஸ்ஸிங் ரூமில் செய்யும் வேலையா இது! ஐபிஎல் மானத்தை வாங்கிய ரியான் பராக்.. பிசிசிஐ வைத்த செக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved