Russia banned to participate in the Winter Olympic Games - International Olympic Committee Action

ஊக்கமருந்து குற்றச்சாட்டிற்கு ஆளான ரஷியாவுக்கு வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

2014 சோச்சி ஒலிம்பிக் போட்டியின்போது ரஷிய வீரர் /வீராங்கனைகள் பலர் அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணைக் குழு ஆகியவை மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் குற்றாச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளன.

அதனையடுத்து ரஷியாவுக்கு வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

அத்துடன், சோச்சி ஒலிம்பிக்கின்போது ரஷிய விளையாட்டுத் துறை அமைச்சராகவும், தற்போது அந்நாட்டின் துணை பிரதமராகவும் இருக்கும் விடாலி முட்கோவுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ரஷிய வீரர் / வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பொது வீரர் / வீராங்கனைகளாக கலந்துகொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.