Asianet News TamilAsianet News Tamil

Paris 2024 Paralympics: ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

Rubina Francis Wins Women's 10m Air Pistol SH1 Bronze vel
Author
First Published Aug 31, 2024, 8:06 PM IST | Last Updated Aug 31, 2024, 8:06 PM IST

பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இன்றைய தினம் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

Paralympics: ஒரே நாளில் 4 பதக்கங்களை வேட்டையாடிய இந்தியா - பட்டியலில் எந்த இடம் தெரியுமா?

இப்போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சரே ஜவன்மர்டி முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

ஆத்தாடி ஆத்தா என்னா அடி! 20 ஓவரில் 308 ரன்: 31 சிக்ஸ், 19 பவுண்டரி - வெறியாட்டம் ஆடிய பதோனி

முன்னதாக நேற்றைய தினம் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்களம் என 4 பதக்கங்களைப் பெற்றிருந்தது. இன்றைய தினம் கூடுதலாக ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்த நிலையில் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. பதக்கப்பட்டியிலில் சீனா தொடர்ந்து முதல் இடத்திலும், இந்தியா 19வது இடத்திலும் உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios