ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. 

முதல் வீரராக மனோஜ் திவாரி ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலையுடன் ஏலம் விடப்பட்டார். ஆனால் அவரை அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. 

இதையடுத்து ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலையுடன் ஏலம் விடப்பட்ட புஜாராவும் விலைபோகவில்லை. அதே 50 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலம் விடப்பட்ட ஹனுமா விஹாரியை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது. 

இதையடுத்து இந்த ஏலத்துக்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹெட்மயர் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துடன் ஏலம் விடப்பட்டார். அவரை எடுக்க முதலில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் ஏலம் 3 கோடியை தாண்டியவுடன் ராஜஸ்தான் அணி பின்வாங்கியது. இதையடுத்து பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணி போட்டியிட்டது. இரு அணிகளும் ஹெட்மயரை எடுக்க முனைப்பு காட்டின. 

எனினும் இறுதியில் ரூ.4.2 கோடிக்கு ஆர்சிபி அணி ஹெட்மயரை எடுத்தது.