- Home
- Sports
- Sports Cricket
- போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
பாதியில் நிறுத்தப்பட்ட IPL தொடர் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் வெளிநாடு சென்ற வீரர்களை தொடரில் பங்கேற்க கட்டாயப்படுத்த மாட்டோம் என IPL நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IPL 2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது முப்படைகளையும் தயார் செய்து Operation Sindoor என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை துள்ளியமாக தாக்கி அழித்தது.
இந்திய பாதுகாப்பு படை பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அத்துமீறி பொதுமக்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதனால் இரு நாடுகள் இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக IPL 2025 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
IPL Players
மீண்டும் IPL போட்டிகள்
ஆனால் தற்போது இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதால் பதற்றம் சற்று தணிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனிடையே பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. தொடர் பாதியில் தடைபட்டதால் சொந்த நாடுகளுக்கு திரும்பிய அயல்நாட்டு வீரர்கள் மீதம் உள்ள போட்டிகளில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
IPL Gujarat Players
சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் நட்டத்திர பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் தனது சொந்த நாட்டுக்கு சென்ற நிலையில், அவர் மீதம் உள்ள IPL போட்டிகளில் பங்கேற்க மாட்டார். விரைவில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்டார்க் பயிற்சி மேற்கொள்ள உள்ளதால் அவர் IPL போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
Mitchell Starc
வீரர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்படும் - IPL நிர்வாகம்
பல முன்னணி வீரர்களும் இதுபோன்ற கலவையான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி சொந்த நாடுகளுக்கு சென்ற வெளிநாட்டு வீரர்களை மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வற்புறுத்தும் திட்டம் இல்லை. வீரர்களின் விருப்பத்திற்கு IPL நிர்வாகம் மதிப்பளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.