Virat Kohli: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் விராட் கோலி! உருக்கமான பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Virat Kohli announces retirement from Test cricket
இந்திய கிரிக்கெட் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விராட் கோலி, "டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூவை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது... நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்," என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
மேலும் விராட் கோலி தனது பதிவில், ''வெள்ளை ஜெர்சி அணிந்து விளையாடுவதில் ஏதோ ஒரு ஆழமான தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அமைதியான வாழ்க்கை, நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத ஆனால் என்றென்றும் உங்களுடன் இருக்கும் சிறிய தருணங்கள்'' என்று கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். இப்போது விராட் கோலியும் ஓய்வு பெற்று இருப்பது இந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
விராட் கோலி முடிவை ஏற்காத பிசிசிஐ
இரண்டு நாட்களுக்கு முன்பு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரது முடிவை பிசிசிஐ ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், முடிவை மறுபரீசிலனை செய்யும்படி கோலியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தான் விராட் கோலி ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், விராட் கோலின் பேட்டிங் பார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரோகித் சர்மா டெஸ்ட்டில் இருந்து விலகிய நிலையில், விராட் கோலியும் விலகியுள்ளது இந்திய அணியில் அனுபவ வீரர்களுக்கு பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.