Virat Kohli: விராட் கோலியின் 10th மார்க் ஷீட் வைரல்! எவ்ளோ மார்க் தெரியுமா?
விராட் கோலி கடந்த 2023ம் ஆண்டு இணையத்தில் பகிர்ந்த 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இப்போது வைரலாகி வருகிறது.

Virat Kohli's 10th mark sheet
Virat Kohli's 10th mark sheet viral: இன்றைய கிரிக்கெட்டின் முகமாக கருதப்படுபவர் விராட் கோலி. கிரிக்கெட்டின் கிங் எனப்படும் விராட் கோலி செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். சச்சின் டெண்டுல்கர், தோனிக்கு பிறகு கிரிக்கெட் உலகை ஆண்டு கொண்டிருக்கிறார் கோலி. எப்போதும் என்ர்ஜிட்டிக்காக வலம் வரும் விராட் கோலி, தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வெளிப்படையாக இருப்பவர்.
Virat Kohli's 10th mark sheet viral
எக்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பிசியாக வலம் வரும் கோலி, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, ஜிம் வொர்க் அவுட் உள்ளிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், விராட் கோலியின் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டு கோலி தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை சமூக ஊடக தளமான 'கூ' வில் பகிர்ந்து இருந்தார்.
அந்த மதிப்பெண் பட்டியல் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மதிப்பெண் பட்டியல் விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு தேர்வுகளின் போது வெவ்வேறு பாடங்களில் பெற்ற மதிப்பெண்களைக் காட்டியது. அவர் ஆங்கிலத்தில் 83, இந்தியில் 75, கணிதத்தில் 51, அறிவியலில் 55, சமூக அறிவியலில் 81, மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிமுகத்தில் 74 மதிப்பெண்களை எடுத்துள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 69.8 சதவீதம் ஆகும்.
டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராக விராட் கோலி சாதனை!
IPL 2025, Virat Kohli
இந்த மதிப்பெண் பட்டியலை நெட்டிசன்கள் அதிவேகமாக பகிர்ந்து வருகின்றனர். ''அட! கோலி கணிதத்தில் இவ்வளவு மார்க்தான் எடுத்தாரா? நம்மள மாதிரி தான் போல'' என்று ஒரு சிலர் வேடிக்கையான கமெண்ட்களை செய்து வருகின்றனர். ''விராட் கோலி அந்த அளவுக்கு மார்க் பெறவில்லை. ஆனால் தான் களமிறங்கிய துறையில் நம்பர் 1 ஆக வலம் வருகிறார். அதிகம் மார்க் பெறவிட்டாலும், அவரின் விடா முயற்சியும், கடின உழைப்பும் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது'' என்று வேறு சிலரும் தெரிவித்தனர்.
Virat Kohli, RCB
இப்போது நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் விராட் கோலி சாதனைகள் மேல் சாதனைகள் படைத்து வருகிறார். டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். ஐபிஎல் வரலாற்றில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்களை அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.