MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராக விராட் கோலி சாதனை!

டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராக விராட் கோலி சாதனை!

Virat Kohli 100 Half Century in T20 Cricket : டி20 போட்டிகளில் விராட் கோலி 100 அரை சதங்கள்: ஐபிஎல் 2025 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அவர்களின் சொந்த மண்ணில் ஆர்சிபி அதிர்ச்சி கொடுத்தது. விராட் கோலி, பிலிப் சால்ட் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றொரு சாதனையை படைத்தார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 14 2025, 01:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

டி20 போட்டிகளில் விராட் கோலி 100 அரை சதங்கள்:

Virat Kohli 100 Half Century in T20 Cricket : ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். ஆர்ஆர் பந்துவீச்சை சிதறடித்து இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் கோலி இந்த சாதனையை படைத்தார். 174 ரன்கள் இலக்கை துரத்தும் போது 39 பந்துகளில் ஹசரங்கா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

37

விராட் கோலி, பில் சால்ட் அதிரடியால் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 175/1 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 58வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

47

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த வீரர்களில் வார்னருக்கு அடுத்தபடியாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். 

57

13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்

ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் ஆனார். மேலும், கிறிஸ் கெயில், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மாலிக், கீரன் பொல்லார்ட் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை படைத்த 5வது வீரர் ஆனார். விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 258 போட்டிகளில் விளையாடி 132 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8252 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 58 அரைசதங்கள், 8 சதங்கள் அடங்கும்.

67

விராட் கோலி

விராட் கோலி இந்திய அணி சார்பில் 125 டி20 போட்டிகளில் விளையாடி 4188 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம், 38 அரைசதங்கள் அடங்கும். கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு கோலி தனது டி20 கிரிக்கெட் சர்வதேச வாழ்க்கைக்கு விடை கொடுத்தார்.

77

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

விராட் கோலி, பில் சால்ட் அரைசதத்தால் ஆர்சிபி வெற்றி; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விராட் கோலி
ஐபிஎல் 2025
இந்தியன் பிரீமியர் லீக்
RR vs RCB
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image2
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image3
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved