Rotterdam Open Tennis - Roger Federer won the 97th championship
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் வென்றார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் நெதர்லாந்தில் நடைபெற்றது.
இதில், உலகின் முதல் நிலை வீரரான ஃபெடரர் இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.
இதில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் டிமிட்ரோவை வீழ்த்தினார் ஃபெடரர்.
டிமிட்ரோவை இதுவரை 7 முறை சந்தித்துள்ள ஃபெடரர், 7-வது வெற்றியை பதிவு செய்தார்.
இது ஃபெடரரின் டென்னிஸ் வாழ்வில் 97-ஆவது பட்டமாகும்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர் கூறுகையில், "இப்போட்டியில் அரையிறுதி வரை முன்னேறவே இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
