Rome Masters Failure to Wawrinka Venus Williams wins ...

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார்.

இதில், 6-7 (1), 4-6 என்ற நேர் செட்களில் வாவ்ரிங்காவை, ஜான் இஸ்னர் தோற்கடித்தார்.

ஜான் இஸ்னர் தனது காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டா மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.