rohith sharma is a one day match captain in srilanka series

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் கேப்டன் கோலி விளையாடி வருகிறார். ஓய்வில்லாமல் விளையாடுவதால், உடலை பராமரிக்க முடியாததால், உடலையும் மனதையும் சீராக்க ஓய்வு வேண்டும் எனக்கோரி பிசிசிஐ-யிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

ஆனால், அவருக்கு ஓய்வளிக்கப்படாமல் இருந்தது. அதனால் அவர் பிசிசிஐ-யிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கோலியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு அளித்துள்ளது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் போட்டி அணி வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்கிய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல்.