வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் இந்த அதிரடி நடவடிக்கைக்கான காரணம் வெளிவந்துள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இது முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. அதற்கு பிறகு அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

மோசமான ஃபார்மில் இருக்கும் தோனி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தோனி அதிகபட்சம் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள ஒருநாள் உலக கோப்பை வரை தான் ஆடுவார். அதன்பின்னர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்பிறகு 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க உள்ளது. எனவே அதில் தோனி ஆடுவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் நிலையில், டி20 அணியில் தோனி ஆடுவதில் அர்த்தமில்லை. எனவே அவருக்கு பதிலாக ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், தோனி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தோனி இந்த இரண்டு தொடர்களின் 6 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டதாலேயே அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ஆனால் பிரசாத்தின் கருத்து வெறும் கண் துடைப்புதான் என்பது அனைவருக்கும் தெரியும்.