இறுதிப் போட்டிக்கு யாருக்கு சாதகம்? இதுவரையில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – புனேரி பல்தான் போட்டிகள் ரீவைண்ட்!

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் இன்று நடக்கும் இறுதிப் போட்டியானது இதுவரையில் நடந்த போட்டிகளின் படி புனேரி பல்தான் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Puneri Paltan won 8 matches in 14 matches against Haryana Steelers in PKL all Seasons and highest score in 51 rsk

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தது. இதில், யு மும்பா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து 9 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், 2 முறை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், யு மும்பா ஒரு முறையும், பாட்னா பைரேட்ஸ் 3 முறையும், பெங்களூரு புல்ஸ் ஒரு முறையும், பெங்கால் வாரியர்ஸ் ஒரு முறையும், தபாங் டெல்லி ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.

திரும்ப வரும் ஜஸ்ப்ரித் பும்ரா – 5ஆவது போட்டியிலிருந்தும் விலகிய கேஎல் ராகுல்!

12 அணிகள்:

இதையடுத்து புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிறது. தமிழ் தலைவாஸ், யு மும்பா, குஜராத் ஜெயிண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யுபி யோத்தாஸ், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு காளைகள், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான் என்று 12 அணிகள் இடம் பெற்று விளையாடின.

இந்தப் போட்டிகள் ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், பெங்களூரு, புனே, நொய்டா என்று பல பகுதிகளில் நடைபெற்றது.

பிளே ஆஃப்

22 போட்டிகள் முடிவில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று (எலிமினேட்டர்) தகுதி பெற்றன.

PKL10 – முதல் முறையாக டிராபியை சுமக்க போகும் அணி எது? ஃபைனலில் ஹரியானா ஸ்டீலர்ஸ் vs புனேரி பல்தான்!

அரையிறுதிப் போட்டி

இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரு அணிகள் மட்டுமே 22 போட்டிகளில் முறையே 17 மற்றும் 16 போட்டிகளில் வெற்றி பெற்று 96 மற்றும் 94 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

எலிமினேட்டர்

எலிமினேட்டர் 1 மற்றும் எலிமினேட்டர் 2 போட்டிகளில் பாட்னா பைரேஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 2 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டி

முதல் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புனேரி பல்தான் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தேசிய அளவிலான பெஞ்ச் பிரஸ் & டெட் லிப்ட் போட்டிகள் - தங்கப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் ஆதித்யா!

இறுதிப் போட்டி – ஹரியானா ஸ்டீலர்ஸ் – புனேரி பல்தான்

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 14 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதில், ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அதிகபட்ச புள்ளிகள்:

  1. ஹரியானா அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக புனேரி பல்தான் 51 புள்ளிகள் பெற்றுள்ளது.
  2. குறைந்தபட்சமாக 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
  3. இதே போன்று புனேரி பல்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அதிகபட்சமாக 44 புள்ளிகள் பெற்றுள்ளது.
  4. குறைந்தபட்சமாக 22 புள்ளிகள் பெற்றுள்ளது.
  5. ஒட்டு மொத்த சீசன்களின்படி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியானது 136 போட்டிகளில் விளையாடி 67 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்ச புள்ளிகள் 52.
  6. புனேரி பல்தான் விளையாடிய 196 போட்டிகளில் 93 வெற்றிகளை பெற்றுள்ளது. அதிகபட்சமாக 53 புள்ளிகள் பெற்றுள்ளது.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios