புரோ கபடி லீக் தொடரின் இன்றைய பரபரப்பான போட்டியில் யு மும்பாவை வீழ்த்தி புனேரி பல்தான் இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது. 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்தடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.

பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் யு மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவில் புள்ளிகளை சேர்க்க, பரபரப்பான இந்த போட்டியில் கடைசியில் 30-28 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இது புனேரி பல்தானின் 4வது போட்டி. இந்த 4 போட்டிகளில் இதுதான் புனேரி பல்தான் அணியின் முதல் வெற்றி. 

இதையும் படிங்க- ஃபாஸ்ட் பவுலர்கள் படுமோசம்.. பேட்டிங் அதைவிட மோசம்..! நமீபியாவிடம் தோற்ற இலங்கையை வெளுத்து வாங்கிய மலிங்கா

அதற்கடுத்த போட்டியில் உ.பி. யோதாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய உ.பி. யோதாஸ் அணி, 44-37 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: விசா பிரச்னையால் ஆஸி.,க்கு பறக்கமுடியாத உம்ரான் மாலிக்..! இன்னொரு வீரரும் பாவம்

இந்த சீசனில் 2வது வெற்றியை பெற்ற உ.பி. யோதாஸ் அணி, புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. முதல் வெற்றியை பெற்ற புனேரி பல்தான் அணி 8ம் இடத்தில் உள்ளது. டபாங் டெல்லி அணி முதலிடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்திலும் உள்ளன.