Asianet News TamilAsianet News Tamil

ப்ரோ கபடி லீக்: 8 சீசனில் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்! அதிகமுறை டைட்டில் வென்ற & டைட்டில் வெல்லாத அணிகள்

ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நாளை தொடங்கும் நிலையில், 8 சீசன்களில் கோப்பையை வென்ற அணிகள், அதிகமுறை கோப்பையை வென்ற அணிகள், கோப்பையை இதுவரை வென்றிராத அணிகள் ஆகிய விவரங்களை பார்ப்போம்.
 

pro kabaddi league title winners of each season most time champions and the teams which are not even win single title
Author
First Published Oct 6, 2022, 4:50 PM IST

கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கு முறையே ஐபிஎல், ஐ.எஸ்.எல் என லீக் தொடர்கள் நடத்தப்படும் நிலையில், அதேபோலவே இந்தியாவின் பாரம்பரிய  விளையாட்டான கபடி விளையாட்டை வளர்க்கும் விதமாகவும், கபடி வீரர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விதமாகவும் ப்ரோ கபடி தொடர் நடத்தப்பட்டுவருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு ப்ரோ கபடி தொடங்கப்பட்டு, இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 9வது சீசன் நாளை(அக்டோபர் 7) தொடங்குகிறது. 12 அணிகள் கலந்துகொண்டும் ஆடும் ப்ரோ கபடி போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளன. 

இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: எந்தெந்த அணிகள் எப்போது மோதுகின்றன..? முழு போட்டி அட்டவணை

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ப்ரோ கபடி போட்டிகளை பார்க்கலாம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஆப்-பிலும் ஆன்லைனில் பார்க்கலாம். 

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் 9வது சீசனில் கலந்துகொண்டு ஆடும் நிலையில், 8 சீசனில் கோப்பையை வென்ற அணிகள், அதிகமுறை டைட்டிலை வென்ற அணிகள், டைட்டில் வென்றிராத அணிகள் ஆகிய விவரங்களை பார்ப்போம்.

ப்ரோ கபடி லீக் தொடரில் டைட்டில் வென்ற அணிகள்:

2014 (முதல் சீசன்) - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

2015 (2வது சீசன்) - யு மும்பா

2016 (3வது சீசன்) - பாட்னா பைரேட்ஸ்

2017 (4வது சீசன்) - பாட்னா பைரேட்ஸ்

2018 (5வது சீசன்) - பாட்னா பைரேட்ஸ்

2019 (6வது சீசன்) - பெங்களூரு புல்ஸ்

2020 (7வது சீசன்) - பெங்கால் வாரியர்ஸ்

2021 (8வது சீசன்) - டபாங் டெல்லி

இதுவரை நடந்துள்ள 8 சீசன்களில் பாட்னா பைரேட்ஸ் அணி தான் அதிகமுறை டைட்டிலை வென்றுள்ளது. தொடர்ச்சியாக 3 முறை டைட்டிலை வென்று சாதனை படைத்துள்ளது பாட்னா பைரேட்ஸ் அணி. 

ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு, பெங்கால், டெல்லி அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: அனைத்து அணிகளின் ஓனர், கேப்டன், பயிற்சியாளர்..! முழு விவரம் இதோ

தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

இந்த சீசனில் பவன் செராவத்தை அதிகமான தொகை (ரூ.2.26 கோடி) எடுத்து அவரை கேப்டனாக நியமித்துள்ள தமிழ் தலைவாஸ் அணி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios