Asianet News TamilAsianet News Tamil

Pro Kabaddi League: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் படுதோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸிடம் 61-38 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி படுதோல்வி அடைந்தது.
 

pro kabaddi league 2022 haryana steelers beat tamil thalaivas by 61 38
Author
First Published Dec 10, 2022, 10:09 PM IST

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ்,  யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், டபாங் டெல்லி ஆகிய 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.

லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசியில் யு மும்பா அணி 36-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

FIFA World Cup 2022: காலிறுதி போட்டியின் முதல் பாதியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரொனால்டோ.! இதுதான் காரணம்

அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸும் ஹரியானா ஸ்டீலர்ஸும் மோதின. ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட தமிழ் தலைவாஸ் அணியும், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற ஹரியானா ஸ்டீலர்ஸும் இன்றைய போட்டியில் மோதின.

டி20 உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சாஹல்

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடி புள்ளிகளை குவித்தது. தமிழ் தலைவாஸ் அணியால் ஹரியானா ஸ்டீலர்ஸ் மீது எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 61 புள்ளிகளை குவித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் 61-38 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios