FIFA World Cup 2022: காலிறுதி போட்டியின் முதல் பாதியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரொனால்டோ.! இதுதான் காரணம்
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நாக் அவுட் போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோவை போர்ச்சுகல் அணி பென்ச்சில் உட்காரவைத்ததே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், மொராக்கோ அணிக்கெதிரான காலிறுதி போட்டியின் முதல் பாதியிலும் ரொனால்டோவை போர்ச்சுகல் அணி பென்ச்சில் உட்காரவைத்தது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரேசில், மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. போர்ச்சுகல் - மொராக்கோ அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி இன்று நடந்துவருகிறது.
FIFA World Cup: பரபரப்பான காலிறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணியில் தொடக்க லெவனில் கிறிஸ்டியானா ரொனால்டோ இடம்பெறவில்லை. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோவை அந்த போட்டியில் பென்ச்சில் உட்காரவைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக ஆடிய ராமோஸ் 3 கோல்களை அடித்து அசத்திய நிலையில், காலிறுதி போட்டியிலும் ரொனால்டோ ஆடமாட்டார் என்று அப்போதே தகவல் வெளியானது.
அதேபோல, இன்று போர்ச்சுகல் - மொராக்கோ இடையேயான காலிறுதி போட்டியில் களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் தொடக்க லெவனில் ரொனால்டோ இடம்பெறவில்லை. ரொனால்டோ மீண்டும் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ரொனால்டோ ஆடாத நிலையில், முதல் பாதியில் போர்ச்சுகல் கோல் அடிக்கவில்லை. ஆனால் முதல் பாதியில் மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டி20 உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சாஹல்
ரொனால்டோவை 2ம் பாதியில் ஆடவைப்பதுதான் போர்ச்சுகல் அணியின் உத்தி என்றும், அவர் முதல் பாதியில் ஆடாமல் 2ம் பாதியில் ஆடுவது தான் அணிக்கு நல்லது என்பதால் அவரை 2ம் பாதியில் ஆடவைப்பதற்காக முதல் பாதியில் உட்காரவைத்ததாக பயிற்சியாளர் சாண்டோஸ் தெரிவித்தார்.