புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 67-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் 41-41 என்ற புள்ளிகள் கணக்கில் சமன் அடைந்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 67-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அரியாணா மாநிலம் சோனிபட்டில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 22-12 என்ற கணக்கில் அரியாணா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஆட்டம் தலைக்கீழாக மாறியது. சர்வில் இருந்து மீண்ட பாட்னா அணியினர் ஆட்டத்தை தன்வசமாக்கி இறுதியில் ஆட்டத்தை சமநிலையில் முடித்தனர்.

இந்த ஆட்டத்தில், பாட்னா அணி, 26 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது.

அரியாணா 23 ரைடு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.

பாட்னாவின் கேப்டன் பிரதீப் நர்வால் 21 ரைடுகளில் 13 புள்ளிகளை கைப்பற்றினார். அணியின் தடுப்பாட்டக்காரர் விஜய் 4 புள்ளிகள் வென்றார்.

அரியாணா ரைடர் வாஜிர் சிங் மொத்தம் 21 ரைடுகளில் 10 புள்ளிகளைப் பெற்றார். பின்கள வீரரான மோஹித் சில்லார் 5 டேக்கிள் புள்ளிகள் எடுத்தார்.