டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்ததன் மூலமாக இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஆர் பிரக்ஞானந்தா. தற்போது 18 வயதில் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலமாக பிரக்ஞானந்தா இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளர்.
இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?
உலக தரவரிசைப் பட்டியலில் 200 புள்ளிகள் அதிக பெற்றுள்ள உலக சாம்பியனான டிங் லிரனை, தமிழகத்தைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா வீழ்த்தி இந்த அற்புதமான சாதனையை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!
