இது என்ன பேட்டிங் பிட்சா? இந்திய அணியில் மாற்றமா? ஷிவம் துபே, ரிங்கு விளையாடுவார்களா?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில், நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அனுபவத்திற்கு ஆப்பு வச்ச ஜிம்பாப்வே – கடைசில பவுலிங் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட மேத்யூஸ்!
ஆனால், தற்போது இருக்கும் பெங்களூரு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஸ்பின்னர்களால் விக்கெட் கைப்பற்ற முடியாது என்று கூறப்படுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களுக்கு மேல் எடுக்கும். இந்திய அணியில் ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் - விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு!
ஆனால், முதல் 2 டி20 போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா இந்தப் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜித்தேஷ் சர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம். ரவி பிஷ்னாய் அல்லது அக்ஷர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.
35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் வரலாற்றில் சாதனை படைத்த இந்திய வீரர் சுமித் நாகல்!