இந்தியா விளையாடும் போட்டிகள் நாள் 14: மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரையில் 5 பதக்கங்கள் கைப்பற்றியிருந்த நிலையில் இன்று மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது இன்னும் 2 நாட்களில் நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. ஆனால், இந்தியா இதுவரையில் 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 64ஆவது இடத்தில் உள்ளது. நேற்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜ் சோப்ராவின் சாதனை பயணம் பற்றி தெரியுமா?
இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் தொடங்கி 14ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்தியா கோல்ஃப், தடகளம், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில், மல்யுத்தம் போட்டியில் பங்கேற்கும் அமன் செராவத் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 12.30 மணி: கோல்ஃப்
மகளிருக்கான தனிநபர் ஸ்டிரோக் சுற்று 3
அதிதி அசோக் மற்றும் தீக்ஷா டாகர்
பிற்பகல் 2.10 மணி – தடகளம் - மகளிருக்கான 4*400மீ ரிலே சுற்று 1 – ஹீட் 1
பிற்பகல் 2.35 மணி - தடகளம் - ஆண்களுக்கான 4*400மீ ரிலே சுற்று 1 – ஹீட் 1
இரவு 9.45 மணி – மல்யுத்தம்
அமன் செராவத் - டேரியன் டோய் குரூஸ் (போர்ட்டோ டெகோ)
ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கம் போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா பங்கேற்ற 16 விளையாட்டுகளில் வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, நீச்சல், டென்னிஸ், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் என்று 11 விளையாட்டுகளில் பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது. இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.
நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இதே போன்று ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலமாக இந்தியா 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 64ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.