Asianet News TamilAsianet News Tamil

ஒருமுறை ஈட்டி வாங்க பணம் இல்லை, இன்று ஒலிம்பிக் சாம்பியன் – பாக்., வீரர் அர்ஷாத் நதீம் 92.97மீ புதிய சாதனை!

பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதல் முயற்சியிலேயே 92.97மீ தூரம் எறிந்து பாரிஸ் 2024 ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தூரம் எறிந்த வீரராக சாதனை படைத்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

Arshad Nadeem Becomes 1st Gold Medal Winner with Record of 92.97m in Field Event in Mens Javelin Throw Final at Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 9, 2024, 1:56 AM IST | Last Updated Aug 9, 2024, 1:56 AM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், நீரஜ் சோப்ரா, அர்ஷாத் நதீம், ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்பட 12 வீரர்ங்கள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் வரிசையாக முதல் முயற்சியை மேற்கொண்டனர். இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கால் வழுக்கி கீழே விழுந்து பவுல் ஆனார். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் முதல் முயற்சியிலேயே 92.97மீ தூரம் எறிந்து இந்த ஒலிம்பிக் தொடரில் அதிக தூரம் எறிந்த வீரராக புதிய சாதனையை படைத்தார்.

அர்ஷாத் நதீம் 92.97, புதிய ஒலிம்பிக் சாதனை, நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!

அதோடு, 90 மீட்டருக்கும் அதிகமாக எறிந்த 6ஆவது வீரராக சாதனையை நிகழ்த்தினார். 2ஆவது முயற்சியில் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54மீ தூரம் எறிந்து 3ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதன் பிறகு 5 சுற்றுகள் முடிவு வரையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இறுதியாக அர்ஷாத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 தூரம் எறிந்த நீரஜ் சோப்ர தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இறுதியாக பீட்டர்ஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அர்ஷாத் நதீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் முதல் பதக்கத்தை வென்றது. அதுமட்டுமின்றி தனது நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அர்ஷாத் படைத்துள்ளார்.

தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற அமன் செராவத்!

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது. இதுவரையில் பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக் தொடரில் மட்டும் 10 பதக்கங்களை குவித்துள்ளது. இதில், 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் அடங்கும். ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானுக்கு மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டையில் 2 தனிப்பட்ட பதக்கங்கள் மட்டுமே உள்ளன. முகமது பஷீர் 1960 இல் வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஹுசைன் ஷா 1988 சியோல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios