தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற அமன் செராவத்!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தற்போது முடிந்த ஆண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் செராவத் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க வாய்ப்பிற்கு தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் நீச்சல், ஹாக்கி, கோல்ஃப், தடகளம், வில்வித்தை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை என்று 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்று வருகிறது.
ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ்: யார் இந்த ஸ்ரீஜேஷ்? சாதனைகள் என்ன?
ஆனால், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, நீச்சல், டென்னிஸ், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் என்று 11 விளையாட்டுகளில் இந்தியா பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது. இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது.
கடைசியாக மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்க இருந்த தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கைநழுவிப் போனது. ஆம், இந்த போட்டியில் இந்தியா சார்பில் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் கூடுதல் உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் 13ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியா கோல்ஃப், தடகளம், மல்யுத்தம், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் அதிதி அசோக் மற்றும் திக்ஷா டாகர் முறையே 72 மற்றும் 71 புள்ளிகள் பெற்று 2ஆது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தற்போது 2ஆவது சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷூ மாலிக் முதல் சுற்று போட்டியிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். எலிமினேஷன் சுற்று என்று சொல்லப்படும் 16ஆவது சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் லூயிஸ் மரூலிஸை எதிர்கொண்டார். இதில், 2-7 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதே போன்று ஆண்களுக்கான 57கிலோ மல்யுத்த எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் மசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவ்வை எதிர்கொண்டார். இதில், செஹ்ராவத் 10-0 என்று புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அல்பானியா நாட்டைச் சேர்ந்த ஜெலிம்கான் அர்செனோவிச் அபகரோவ்வை எதிர்கொண்டார்.
அன்ஷூ மாலிக் தோல்வி – 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இந்தப் போட்டியில் செஹ்ராவத் 12-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரே ஹிகூச்சியை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹிகூச்சி 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அமன் செராவத் வெண்கலப் பதக்க வாய்ப்பிற்கு தகுதி பெற்றார். இதில் போர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த டேரியன் டோய் குரூஸை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி 9ஆம் தேதி நடைபெறுகிறது.
- Aditi Ashok
- Aman Sehrawat
- Anshu Malik
- Athletics
- Diksha Dagar
- Golf
- Hockey
- India vs Spain
- Javelin Throw Final
- Jyothi Yarraji
- Neeraj Chopra
- Olympics 2024 India Schedule Day 13 August
- Paris 2024 Olympics
- Paris Olympics 2024
- Paris Olympics India Schedule 2024
- Vinesh Phogat
- Vinesh Phogat Retirement
- Vinesh Phogat Wrestling Retirement
- Womens 100m hurdles
- Wrestling