Hockey, Paris 2024: தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை – இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஸ்பெயின் வீரர் மார்க் மிரேல்ஸ் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 30 மற்றும் 33ஆவது நிமிடங்களில் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக இந்திய ஹாக்கி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 10 கோல் அடித்துள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தது.
ஒலிம்பிக் தொடரில் முதல் முதலாக இந்தியா 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இதையடுத்து, 1932 லாஸ் ஏஞ்சல்ஸ், 1936 பெர்லின், 1948 லண்டன், 1952 ஹெல்சிங்கி, 1956 மெல்போர்ன் ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஹாக்கி டீம் தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இதே போன்று 1960 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. மேலும், 1968, 1972, 2020, 2024 ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.
அன்ஷூ மாலிக் தோல்வி – 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இந்த நிலையில் தான் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இது தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை. இந்த ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருக்கிறது. ஒலிம்பிக்கில் தொடர்ந்து இந்திய அணி பெற்ற 2ஆவது வெற்றியாகும். திறமை, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை நம் நாட்டில் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.