பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு 12 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு 12 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விதிகளை அவர் மீறியதாக கண்டறிந்த வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஷாஸைப் ஹசனுக்கு ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் சூதாட்ட விவகாரத்தில் தடை விதிக்கப்படும் 3-வது பாகிஸ்தான் வீரர் ஷாஸைப்.  பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடிய ஷாஸைப் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட 12 மாதங்கள் தடை 2017 மார்ச் முதல் கணக்கில் கொள்ளப்படுவதால், இந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதியுடன் அவரது தடைக் காலம் நிறைவடைய உள்ளது.

இதனிடையே, ஷாஸைப்புக்கான தடைக் காலம் முடிந்தாலும் அதிகாரப்பூர்வமான போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்க இயலும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சட்ட ஆலோசகர் தஃப்ஃபாஸுல் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.