ஒலிம்பிக்கில் சாதனை படைத்த தங்க மருமகனுக்கு எருமை மாடு பரிசளித்த மாமனார் – பாகிஸ்தான் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

Pakistan Gold Medalist Arshad Nadeem Receives Memorable Gift From his Father in Law rsk

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து 90மீ தூரம் எறிந்தவர்களுக்கான பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தார். அதோடு, தடகளப் போட்டியில் தனது நாட்டிற்காக தங்கம் வென்று கொடுத்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

நீரஜ் சோப்ராவின் 3 அடுக்கு மாடி சொகுசு பங்களா பற்றி தெரியுமா? வீட்டிற்கு வெளியில் என்ன எழுதியிருக்கு?

தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்று கொடுத்த அர்ஷ்த் நதீமுக்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஷத் நதீம். இவர், கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு கிராமத்தைச் சேர்ந்த நவாஸ் என்பவரது மகள் ஆய்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். ஈட்டி எறிதல் மீது அதிக ஆர்வம் கொண்ட அர்ஷத் நதீம் அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெற்று விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்கா புறப்படும் ஒலிம்பிக் கொடி–பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் டாம் குரூஸிடம் வழங்கப்பட்ட ஒலிம்பிக் கொடி

தங்கப் பதக்கம் வென்று கொடுத்த அர்ஷத் நதீமுக்கு பல்வேறு நிறுவனங்களும், அரசும் பரிசுத் தொகை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது குறித்து நதீமின் மாமனார் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் எருமை மாட்டை பரிசாக அளிப்பது எனது, ஒருவருக்கு செல்வம், மற்றும் மகிழ்ச்சி என்றைக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால், தான் நான் எருமை மாட்டை பரிசாக அளித்தேன் என்று கூறியுள்ளார்.

வண்ணமையமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - நிறைவு விழா வீடியோ இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios