மெல்போர்னில் 1981ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மைதானத்திலிருந்து வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பும்போது ஏராளமான இந்திய ரசிகர்கள் ஹோட்டல் வாசலில் குழுமி, வீரர்களை வரவேற்றனர்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் தொடர்ந்து வெளிநாடுகளில் தோற்றுவரும் இந்திய அணிக்கு நடப்பு ஆஸ்திரேலிய தொடர் மிகவும் முக்கியமானது. இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, கண்டிப்பாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்பதோடு, தொடர்ச்சியாக வெளிநாடுகளில் அடைந்து வந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. 

அதற்கேற்றவாறு, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சிறப்பாகவே ஆடிவருகிறது. அடிலெய்டு டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

மெல்போர்னில் 1981ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மைதானத்திலிருந்து வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பும்போது ஏராளமான இந்திய ரசிகர்கள் ஹோட்டல் வாசலில் குழுமி, வீரர்களை வரவேற்றனர். 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணியினர் எடுத்த குரூப் போட்டோவில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும் பீர் பாட்டிலுடன் நின்றனர்.

Scroll to load tweet…

இந்நிலையில், ரவி சாஸ்திரி பீர் குடித்துக்கொண்டே சென்ற வீடியோ தற்போது வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மெல்போர்ன் டெஸ்டில் வென்ற இந்திய வெற்றி வீரர்களுக்கு ரசிகர்கள் ஹோட்டலில் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சென்ற ரவி சாஸ்திரி, பீர் குடித்தபடியே சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதைக்கண்ட நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்தும் நக்கலடித்தும் வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…