murali vijay neglected by ipl teams and heavy demand for rahul and manish

11வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்றைய ஏலத்தில், இந்திய வீரர் லோகேஷ் ராகுலை ஏலத்தில் எடுக்க ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 11 கோடி ரூபாய்க்கு ராகுலை பஞ்சாப் அணி எடுத்தது.

அதேபோல மனீஷ் பாண்டேவிற்கும் கடும் போட்டி நிலவியது. பாண்டேவை எடுக்க ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக 11 கோடி ரூபாய்க்கு பாண்டேவை ஹைதராபாத் அணி எடுத்தது. ஆரம்பத்தில் மனீஷ் பாண்டேவை எடுக்க ஆர்வம் காட்டிய சென்னை அணி, ஏலம் அதிகரிக்க அதிகரிக்க பாண்டேவை எடுக்க விரும்பாததால் ஒதுங்கிக்கொண்டது. கொல்கத்தா அணிக்காக ஆடிவந்த மனீஷ் பாண்டே, இந்தமுறை ஹைதராபாத் அணிக்காக ஆடுகிறார்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் முரளி விஜயை அடிப்படை விலையை கொடுத்துக்கூட எடுக்க எந்த அணியும் தயாராக இல்லாததால், முரளி விஜய் விற்பனையாகவில்லை.