MS Dhoni smashes second longest six of this season at 108m
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. சென்னை அணி சார்பில் டோனி 22 பந்துக்கு 51 ரன்களும், ராயுடு 24 பந்தில் 41 ரன்களும், வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்களும் எடுத்தனர்.
குறிப்பாக கடைசி நான்கு ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடிய தல டோனி 22 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 211 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் சென்னை அணியின் கேப்டன் தல டோனி 108 மீட்டருக்கு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு மாஸ் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் டோனியின் ருத்ரதாண்டவத்தை சென்னை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே கொண்டாடி வருகின்றனர்.
