இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்துக்குள்ளானதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

முகமது ஷமி மீது அவரது மனைவி ஜகான கடந்த சில நாட்களுக்கு முன்பு,தன்னுடைய கணவரான ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டை  வைத்தார்.

அவருக்கு பல பெண்கள் உடன் தகாத உறவு உள்ளது என்றும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,அதற்காக பணம் பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தார்...

மேலும்,ஷமி குடும்பத்தினர் பலமுறை,ஜகானை கொலைசெய்ய திட்டமிட்டதாகவும்ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமலும்,பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாலும் அவர் மீது  குற்றச்சாட்டைமுன்வைத்து,பின்னர் கொல்கத்தா காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது

மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறப்பட்ட நிலையில்,இதை விசாரித்த பிசிசிஐ., ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது. 

இதனால் சுமார் 15 நாட்களுக்கு மேலாக மெண்டல் டார்ச்சரில் இருந்த ஷமி, டேராடுனில் உள்ள அபிமன்யூ கிரிக்கெட் அகாடமியில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக சென்றிருந்தார்.

இந்நிலையில் டேராடுனில் இருந்து இன்று டெல்லி திரும்பியபோது அவரது கார் ஒரு டிரக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஷமி தலையில் பலத்த காயமடைந்தார்.இதற்காக அவருக்கு தலையில் தையல் போட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக  கடும் மன உளைச்சலில் இருந்த ஷமி தற்போது விபத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது