MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs PAK: ஒரே நாளில் இப்படி இளைச்சிட்டாரு அபிஷேக் சர்மா.. பாக்., போட்டியிலும் சஞ்சு சாம்சனா? பிளேயிங் லெவன்!

IND vs PAK: ஒரே நாளில் இப்படி இளைச்சிட்டாரு அபிஷேக் சர்மா.. பாக்., போட்டியிலும் சஞ்சு சாம்சனா? பிளேயிங் லெவன்!

India vs Pakistan: உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா ஒரே நாளில் உடல் எடை குறைந்து விட்டார். ஆகவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா? இந்திய அணி பிளேயிங் லெவன் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 13 2026, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : X

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் நேற்று (பிப்ரவரி 12) நடந்த நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய நமீபியா அணி 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா, பாகிஸ்தான் மோதல்

அடுத்ததாக இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்ள உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? இந்திய அணியின் வியூகங்கள் எப்படி இருக்கும்? என்பது குறித்து பார்ப்போம். 

இந்திய அணியின் சிக்சர் மன்னன் அபிஷேக் சர்மா வயிற்று போக்கு, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் அவதிப்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஒரே நாளில் உடல் எடை குறைந்த அபிஷேக் சர்மா
Image Credit : X

ஒரே நாளில் உடல் எடை குறைந்த அபிஷேக் சர்மா

நேற்றைய போட்டியின்போது கூட அவர் மைதானத்தில் அமர்ந்து இருந்தார். அபிஷேக் சர்மா இப்போது முழுமையாக குணமடைந்து விட்டபோதிலும் அவர் உடல் பலவீனமாக உள்ளதாக கூறப்படுகிறது. வயிற்று போக்குக்கு பிறகு உடல் எடை சில கிலோ குறைந்து விட்டதாக அபிஷேக் சர்மாவே தெரிவித்து இருக்கிறார்.

இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் கூறுகின்றன. நமீபியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் சர்மா ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மிஸ் ஆகலாம் என கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தார்.

Related Articles

Related image1
IND vs NAM: சான்ஸ் மேல சான்ஸ்.. திருந்தாத சஞ்சு சாம்சன்.. டீம விட்டு தூக்குங்க.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Related image2
டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!
34
சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
Image Credit : Getty

சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு

இதனால் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 100% விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. நமீபியாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சொதப்பினாலும் 3 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இதனால் அவரை கிஷான் கிஷனுடன் ஒப்பனிங்கில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் இந்தியா

போட்டி நடக்கும் கொழும்புவின் பிரேமதேச மைதானம் பெரிய கிரவுண்ட் என்பதாலும் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும் இந்திய அணி குறைந்தது 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே வருண் சக்கவர்த்தி, அக்சர் படேலுடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால் ரிங்கு சிங் அல்லது ஷிவம் துபே நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

44
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
Image Credit : BCCI\Twitter

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே அல்லது ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
சஞ்சு சாம்சன்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: LSG கேப்டன் பதவியிலிருந்து பன்ட் நீக்கம்? சீசனின் காஸ்ட்லி பிளேயருக்கு இந்த கதியா..?
Recommended image2
IPL 2026 Playoffs: பிளேஆஃப் ரேஸ்: பஞ்சாப், ராஜஸ்தான், KKR... அந்த 4வது இடம் யாருக்கு?
Recommended image3
CSK downfall: தோனிக்குப் பிறகு சிதறும் CSK.. இன்னும் 5 வருசத்துக்கு கப் மேல கையே வைக்க முடியாது..?
Related Stories
Recommended image1
IND vs NAM: சான்ஸ் மேல சான்ஸ்.. திருந்தாத சஞ்சு சாம்சன்.. டீம விட்டு தூக்குங்க.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Recommended image2
டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved