ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பவனை விட தோனி தான் சிறந்த ஃபினிஷர் என இந்திலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் 1990களில் விளையாடிய மைக்கேல் பவன், சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சிறந்த ஃபினிஷரும் கூட. அந்த காலகட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மிடில் ஆர்டரில் இவரது விக்கெட்டை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இவரது விக்கெட்டை எடுக்க முடியாமல் சர்வதேச பவுலர்கள் திணறுவர். அவரது ஒருநாள் சராசரி சுமார் 55 ரன்கள். 

மைக்கேல் பவன் விளையாடிய காலகட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர்களில் மைக்கேல் வாகனும் ஒருவர். இந்நிலையில், மைக்கேல் வாகனிடம், மிகச்சிறந்த ஃபினிஷர் மைக்கேல் பவனா? மகேந்திர சிங் தோனியா? என சிலர் சமூக வலைதளத்தில் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு சற்றும் யோசிக்காமல், தோனி தான் என பதிலளித்துள்ளார். சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சர்வதேச அளவில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மைக்கேல் பவனை விட தோனி தான் சிறந்த ஃபினிஷர் என மைக்கேல் வாகன் கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.