மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மெக்ஸிகோவின் அகபுல்கோ நகரில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்வெரேவ் தனது காலிறுதியில் அமெரிக்காவின் ரயான் ஹாரிசனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் இறுதியில் ஸ்வெரேவ் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

பின்னர், பேசிய "நான் வெளிப்படுத்திய ஆட்டம் திருப்தி அளிக்கும் படியாக இருந்தது. மீண்டும் சிறப்பாக ஆடத் தொடங்கியதாக உணர்கிறேன்" என்றார்.
இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவ் தான் எதிர்கொண்ட 4 பிரேக் பாய்ண்டுகளையும் தக்க வைத்துக் கொண்டார்.

ஸ்வெரேவ் தனது அரையிறுதியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் டெல் போட்ரோ தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-2, 7-6 என்ற செட்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.