mariya sharapova advanced to next level in sheshen Open Tennis

ஷென்ஸென் ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மரியா ஷரபோவா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஷென்ஸென் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷென்ஸென் நகரில் நேற்று நடைபெற்றது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், ரஷியாவின் மரியா ஷரபோவா மற்றும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவ் மோதினர்.

இதில், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் அலிசனிடம் இழந்தார் ஷரபோவா. எனினும், அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 6-2 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார் ஷரபோவா.

போட்டியில் வெற்றிப் பெற்ற பிறகு ஷரபோவா, "இன்றைய ஆட்டம் போல் எப்போது விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆட்டத்தில் மிக எளிதில் வெற்றி அடைந்தேன்.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி வரவுள்ள நிலையில், இதுபோன்ற போட்டிகள் மூலம் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

நான் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டேன். இந்த ஆட்டத்தில் அலிசன் சிறப்பாக விளையாடினார்" என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் ஜெரீனா தியாஸை அவர் எதிர்கொள்கிறார்.