தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லயன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் மற்றும் அணி வீரர்களாலும் விரும்பப்படவில்லை.

இரண்டாவது இன்னிங்சை ஆடியபோது, டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். டேவிட் வார்னர் பந்தை பிடித்து வீச டிவில்லியர்ஸை நாதன் லயன் ரன் அவுட் ஆக்கினார். அப்போது ரன் ஓடிவந்து கீழே விழுந்த டிவில்லியர்ஸின் நெஞ்சுக்கு அருகே பந்தை நக்கலாக வீசிவிட்டு லயன் ஓடினார். லயனின் இந்த செயல் அந்த அணி ரசிகர்களாலே விரும்பத்தகாத ஒன்றாகிவிட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Pure cheek from Nathan Lyon 😂😂😂 #SAvAUS pic.twitter.com/vhuM4tgOHQ
— Josh Money (@JoshMoneyFOX) March 4, 2018

அதுமட்டுமல்லாமல், டிவில்லியர்ஸை ரன் அவுட்டாக்கிய டேவிட் வார்னர், மகிழ்ச்சியை மட்டும் வெளிப்படுத்தாமல், அவுட்டாகிய டிவில்லியர்ஸை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனே இவ்வாறு நடந்துகொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

The Wolf of Wall Street is a pretty wild movie #SAvAUS pic.twitter.com/qPgnFSxUCb
— Ryan Buckland (@RyanBuckland7) March 4, 2018