லார்ட்ஸ் டெஸ்டின் போது மழை குறுக்கிட்டதால் ஆடுகளத்தை மூட லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் உதவியதற்கு மைதான நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை சென்று டெஸ்ட் போட்டியில் ஆடிய அர்ஜூன், ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. அவர் இங்கிலாந்தில் எம்சிசியில் பயிற்சி பெற்றுவருகிறார். 

இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அவ்வப்போது மழை குறுக்கிட்டது. அப்போது ஆடுகளத்தை மூட மைதான ஊழியர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் உதவினார். 

அர்ஜூன் டெண்டுல்கரின் இந்த செயலுக்கு லார்ட்ஸ் மைதான நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.