Kunming Open ATP Challenger Indian player Champion

குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் கன்னேஸ்வன் முதல்முறையாக சேலஞ்சர் பட்டம் வென்று அசத்தினார்.

குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவின் அன்னிங் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், உலகின் 260-ஆம் நிலை வீரரான பிரஜனேஷ் - உலகின் 229-ஆம் நிலை வீரரான எகிப்தின் முகமது சஃப்வத்தை சந்தித்தார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜனேஷ் 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலமாக 125 தரவரிசை புள்ளிகள் பெற்ற பிரஜனேஷ், இன்று வெளியாகும் புதிய தரவரிசையின்போது உலகின் முதல் 200 இடங்களுக்குள்ளாக முன்னேறுவார். அவர் 175-வது இடத்துக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

அதேபோன்று ஒற்றையர் தரவரிசையில் இதுவரை யூகி பாம்ப்ரி 83-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 115-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சேலஞ்சர் போட்டிகளில் பிரஜனேஷ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது 2-வது முறையாகும். முன்னதாக, கடந்த 2016-இல் புணேயில் நடைபெற்ற போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் வீழ்ந்திருந்தார்.