நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்வதற்கு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் கடைசி போட்டியில் களமிறங்கியுள்ளன. 

முதல் போட்டியில் சரியாக ஆடாத இந்திய அணி, இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. இந்நிலையில், அதேபோல் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தொடரை வெல்லும் உறுதியுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி. 

வெற்றி கட்டாயத்தில் ஆடும் இந்திய அணி, அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. முதலிரண்டு போட்டிகளில் ஆடி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த ஒரேயொரு மாற்றம்தான் செய்யப்படும் என நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம். ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா!! உத்தேச அணி  அதேபோல அந்த ஒரு மாற்றத்துடன் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

ஹாமில்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.