Asianet News TamilAsianet News Tamil

எலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்திய தங்கத் தமிழன் தினேஷ் சார்த்திக்..…. 2 ஆவது  குவாலிபையருக்கு கேகேஆர் முன்னேற்றம்…

kotkatta knight riders team qualified 2 en qualifier
kotkatta knight riders team qualified 2 en qualifier
Author
First Published May 24, 2018, 11:03 AM IST


கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஷ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி  கேகேஆர் அணி 2 ஆவது குவாலிபையருக்கு முன்னேறியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மான் கில் சிறப்பாக ஆடி 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

kotkatta knight riders team qualified 2 en qualifier

இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.ராஜஸ்தான்  ராயல்ஸ் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரி ஆர்ச்சர், பென் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் இறங்கினர்.

அணியின்  ரன் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது திரிபாதி 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ராகானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 

ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி டக் அவுட்டானார்.

kotkatta knight riders team qualified 2 en qualifier

அடுத்து கிளாசனுடன் கிருஷ்ணப்பா கவுதம் இணைந்தார். 2 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.

கொல்கத்தா அணி சார்பில்  பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios