இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இருந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் விலகுவதாக கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (28) தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக விலகுவதாக கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின், ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான சட் சாயர்ஸ் (30) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஸ்டார்க் மேல் சிகிச்சைக்காக நாடு திரும்புவார். ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.