அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியிலிருந்து கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு அண்மையில், டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை ஐசிசி வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாட இருக்கிறது. அதுவும் பெங்களூரு மைதானத்தில் அந்த போட்டி நடக்கிறது.

வரும் ஜூன் மாதம் 14ம் தேதி அந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியிலிருந்து கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். அதற்கு அடுத்ததாக ஜூலை மாதம் 3ம் தேதி இங்கிலாந்துடனான தொடர் தொடங்குகிறது. அதில் சிறப்பாக விளையாடுவதற்காக, அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியிலிருந்து கோலி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி20 போட்டி, ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து கேப்டன் கோலி விலகியுள்ளார். 

கோலி விலகியுள்ளதால், ரோஹித் அல்லது ரஹானே கேப்டன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.