Asianet News TamilAsianet News Tamil

Khelo India : கேலோ இந்தியா விளையாட்டு போட்டி.. நேரில் பார்க்க வேண்டுமா? அனுமதி சீட்டை பெறுவது எப்படி தெரியுமா?

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. 

Khelo India Competition.. Do you know how to get admit card? tvk
Author
First Published Jan 18, 2024, 11:53 AM IST

தமிழகத்தில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் நேரில் காண செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டுகளைப் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது.

இதையும் படிங்க;- என்னுடைய பயோபிக்கில் நடிக்க கரெக்ட் ஆன ஆளு அந்த ஹீரோ தான் - சிக்சர் மன்னன் யுவராஜ் சிங் விருப்பம்

இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். 

இதையும் படிங்க;-  IND vs AFG 3rd T20I: டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios