ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறுமா?

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் நேற்று நடந்த போட்டியில் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Jaipur pink panthers won by 15 Points Difference against Tamil Thalaivas in PKL Season 10 rsk

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் விளையாடிய 16 போட்டிகளில் 11ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று புனேரி பல்தான் 15 போட்டிகளில் விளையாடி 11ல் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. 

IND vs ENG 2nd Test: ரஜத் படிதார், குல்தீப் யாதவ், முகேஷ் குமாருக்கு வாய்ப்பு – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

இந்த நிலையில் தான் கடந்த 31 ஆம் தேதி தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான 99ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிங்க் பாந்தர்ஸ் அணியானது 42 புள்ளிகள் பெற்றது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணியானது 27 புள்ளிகள் மட்டுமே பெற்று 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Summer Olympics 2024: பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு நான் ஜோதியாக இருப்பேன் – அபினவ் பிந்த்ரா!

ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்கள் பிடிக்க வேண்டும். ஆனால், தமிழ் தலைவாஸ் அணியானது கடைசியாக நடந்த பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்ப இழந்தது. இதுவே அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் 45 புள்ளிகள் பெற்று ஹரியான ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணியுடன் சமநிலை பெற்றிருக்கும். ஆனால், தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 16 போட்டிகளில் விளையாடி 9 தோல்விகளுடன் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios