Summer Olympics 2024: பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு நான் ஜோதியாக இருப்பேன் – அபினவ் பிந்த்ரா!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு நான் ஒளி விளக்காக இருப்பேன் என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் வரும் ஜூலை மாதம் பாரிஸில் தொடங்குகிறது. இதற்கான ஜோதி வடிவமைப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு நான் ஜோதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் அமைதி மற்றும் விடா முயற்சியின் கலங்கரை விளக்கமாக திகழும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நான் ஒளி விளக்காக இருப்பேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒளியானது கனவுகளின் சக்தியை குறிக்கிறது. இது தனக்கு கிடைத்த பாக்கியம் மற்றும் மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஜோதியின் வடிவமைப்பானது வெளியிடப்பட்டது. இது ஈபிள் டவர் கோபுரத்தின் பிரதிபலிப்பை பின்பற்றி அமைதியான சூழலை வெளிப்படுத்துகிறது என்று ஜோதியை வடிவமைத்த மேத்யூ லெஹன்னூர் கூறியிருக்கிறார்.
இந்த ஜோதியானது உருண்டையாகவும், மேலிருந்து கீழா சமச்சீராகவும், 360 டிகிரி வரை சமச்சீராகவும் இருக்கிறது. அதனுடைய வளைவுகள் அமைதியை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு இடையில் சமத்துவத்தை நிலைநிறுத்தும் என்று மேத்யூ கூறியிருக்கிறார்.
வரும் ஜூலை மாதம் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் தலைநகரில் விளையாட்டுக்கான கவுண்ட்டவுனை குறிக்கும் ஒலிம்பியாவில் ஜோதி ஏற்றப்பட இருக்கிறது. இந்த நிகழ்வானது கிரேக்கத்தில் பண்டைய ஒலிம்பியாவில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.