IPL 2024 : வெளியானது ஐ.பி.எல் 2024க்கான அட்டவணை - முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?

IPL 2024 : இந்த 2024ம் ஆண்டுக்கான IPL போட்டிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், அதற்கான அட்டவணை இப்பொது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம். 

IPL 2024 matches starting soon schedule for the first 21 matches out now an

உலக அளவில் எத்தனையோ லீக ஆட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் லீக் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதேபோல மிகவும் பிரபலமான ஒரு லீக் ஆட்டமாகவும் இன்றளவும் ஐபிஎல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல்-லின் 17வது சீசன் தற்பொழுது நடக்க உள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தொடரில், இதுவரை 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல்-ன் 17வது லீக் போட்டிகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

நியூசிலாந்தை கதி கலங்க வைத்த மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் – கடைசி பந்தில் ஆஸி, த்ரில் வெற்றி!

இந்நிலையில் முதல் போட்டியே சென்னை மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் முதல் போட்டியில் மோத உள்ளது. தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசன் கோலாகலமாக துவங்குகிறது. 

முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த முதல் 21 போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதே போல குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறவிருக்கின்றது. 

இதில் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 24ஆம் தேதி மோதுகின்றனர். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் நடந்த முதல் நாள் போட்டியில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

IVPL 2024: கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் ஐவிபிஎல் – வரும் 23 ஆம் தேதி ஆரம்பம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios