நியூசிலாந்தை கதி கலங்க வைத்த மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் – கடைசி பந்தில் ஆஸி, த்ரில் வெற்றி!

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Australia beat New Zealand by 6 wickets Difference in 1st T20I Match at Wellington rsk

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கான்வே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரவீந்திரா 68 ரன்கள் எடுக்க, கான்வே 63 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது.

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஓரளவு தொடக்கம் கொடுத்தனர். ஹெட் 24 ரன்களில் வெளியேற வார்னர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாட கிளென் மேக்ஸ்வெல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியாக மிட்செல் மார்ஷ் உடன் இணைந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிட்செல் மார்ஷ் களத்தில் இருந்தார். கடைசி ஓவரை டிம் சௌதி வீசினார். முதல் பந்தை வைடாக வீச, மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவந்தில் டிம் டேபிட் ஒரு ரன் எடுத்தார். 3ஆவது பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

நான்காவது பந்தில் டிம் டேவிட் சிக்ஸர் விளாசினார். கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் பவுண்டரி விளாசி ஆஸி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

டிம் டேவிட் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்களும், மிட்செல் மார்ஷ் 44 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios