Indonesia Open Super Series Pranai and Srikanth advance to quarterfinals



இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் எச்.எஸ். பிரணாய் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மலேசியாவின் லீ சாங் வெய்யுடன் மோதினர்.

இதில், 21-10, 21-18 என்ற நேர் செட்களில் லீ சாங் வெய்யை தோற்கடித்து வென்றார் பிரணாய்.

பிரணாய் தனது காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை சந்திக்கிறார்.

மற்றொரு 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸனுடன் மோதியதில் 21-15, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் சீன தைபேவின் ஸþ வெய் வாங்கை சந்திக்கிறார்.