வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் கனவு: வெள்ளிப் பதக்க மனு தள்ளுபடி

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், எடைப்பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், வெள்ளிப் பதக்கம் கோரிய அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், பதக்கம் இன்றி நாடு திரும்புகிறார் வினேஷ் போகத்.

Indian Wrestler Vinesh Phogat's petition for a silver medal was dismissed by CAS on Wednesday, August 14 rsk

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும், வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் செய்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் - ஏன் இந்த தேர்வு?

கடைசியாக ஒலிம்பிக் கொடியானது லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வழங்கப்பட்டது. இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மகளிருக்கான மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத் எலிமினேஷன் சுற்று, காலிறுதி, அரையிறுதி என்று எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Indian Wrestler Vinesh Phogat's petition for a silver medal was dismissed by CAS on Wednesday, August 14 rsk

அடுத்தநாள் நடைபெற இருந்த இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் கையில் தங்கப் பதக்கம் இருந்திருக்கும். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள் யார்? டாப் 5 இந்திய பவுலர்கள்!

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது. இச்சம்வம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வினேஷ் போகத் தன் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதுவும் பலனளிக்காததால் அவரது முடியை வெட்டியும், ஆடையை குறைத்தும் பார்த்துள்ளனர். அதுவும் பலனளிக்கவிலை என கூறப்படுகிறது.

ரன்வீர் சிங்கால் ஈர்க்கப்பட்ட அனுஷ்கா சர்மாவின் மறைக்கப்பட்ட காதல் கதை!

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 7 ஆம் தேதி விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் அந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 13-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் 3ஆவது முறையாக 16ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் தான் வெள்ளிப் பதக்கத்திற்கான வினேஷ் போகத்தின் மனு விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வினேஷ் போகத் பதக்கம் இல்லாமல் நாடு திரும்புகிறார். வரும் 17 ஆம் தேதி டெல்லி வரும் வினேஷ் போகத் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போகத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) உறுதிசெய்தது. அதோடு அதனுடைய ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios