Paris Olympics 2024: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 10ஆவது நாளான இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான அணியில் 16ஆவது சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Indian Womens Team Beat Romania by 3-2 in Round of 16 and Reached quarterfinal of the Table Tennis at Paris Olympics 2024 rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 57ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

முதல் முறையாக டிராபியை தட்டி தூக்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் – அனுபவத்தை பகிர்ந்த அஸ்வின்!

இந்த தொடரில் நீச்சல், ரோவிங், டென்னிஸ், ஜூடோ, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் 16ஆவது சுற்று போட்டியில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி ரோமானியா அணியை எதிர்கொண்டது. இதில், இந்தியா 3 -2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் வரலாற்றில் நடந்த முதல் சம்பவம் – 100மீ தடகளப் போட்டியில் 10 வினாடிகளுக்குள் வந்த 8 வீரர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios